search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    Italy: Picasso painting found in trash
    X

    60 ஆண்டுகளுக்கு முன் குப்பையில் கிடைத்த பிக்காசோ ஓவியம் - தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி

    • 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார்.
    • பிக்காசோ ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

    இத்தாலி நாட்டில் பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளியான லுங்கி லோ ரோஸா 1962-ல் தனக்குக் கிடைத்த இந்த ஓவியத்தை தனது வீட்டில் மாட்டிவைத்துள்ளார்.

    சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்பு அந்த ஓவியம் பிரபல ஓவியரான பிக்காசோவின் ஓவியம் என அவரது மகன் கண்டுபிடித்துள்ளார்.

    இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.50 கோடி என தெரிய வந்துள்ளது. பிக்காஸோ யார் என தெரியாததால் இதன் மதிப்பு குறித்து அவருக்கு தெரியவில்லை. தற்போது ஓவியத்தை பரிசோதனை செய்த மகன் உண்மையை கண்டறிந்துள்ளார்.

    1881ல் ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் பிறந்த பிக்காசோ அந்நாட்டின் பார்சிலோனா நகரில் வளர்ந்தார். 1904ல் பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்து, தனது படைப்புகள் மூலம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார். 1973ல் தனது 92-வது வயதில் மறையும் வரை சுமார் 70 வருடங்கள் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

    Next Story
    ×