search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    MAYDAY அறிவித்த விமானி.. 179 பேரை பலிகொண்ட தென் கொரிய விமான விபத்தின் திக் திக் நிமிடங்கள்

    • இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.
    • 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள்

    தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென் கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

    தலைநகர் சியோலின் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.

    பறவை ஒன்று விமானத்தில் இடித்ததே விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகளிடம் இருந்து முதற்கட்ட தகவல் வந்துள்ளது. விபத்து தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இரண்டு கருப்புப் பெட்டிகளும் - விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்த விமானப் பணிப்பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கண்விழித்து, என்ன நடந்தது, நான் ஏன் இங்கு இருக்கிறேன் என மிரண்டுபோய் கெட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த விமானத்தின் இருக்கைகள் மற்றும் சாமான்களின் துண்டுகள் ஓடுபாதைக்கு அடுத்துள்ள மைதானத்தில் சிதறிக்கிடந்தன. எரிந்த வால் பகுதியும் அங்கு காணப்பட்டது.

    விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற 177 பேரும் கொரியர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துக்கு ஜிஜூ ஏர் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.

    விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து, பறவை ஒன்று தாக்கும் எச்சரிக்கையை வழங்கப்பட்டுள்ளதும், விமானி "மே டே" [MAYDAY] அவசர அழைப்பை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இக்கட்டான நிலை ஏற்படும் போது விமானிகள் அனைவரையும் அலர்ட் செய்ய அறிவிக்கும் வார்த்தையே MAYDAY.

    Next Story
    ×