search icon
என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
    • ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் டீசர் வெளியானது.

    தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.

    இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.

    வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள 2 வது சீசனின் டீசர் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது.

    எனவே சீனன் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தொடரின் இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தொடரை இயக்கிய அனுபவம், அதற்காக தான் மெனக்கிட்டு செய்த வேலைகள் என பலவற்றை பற்றி பேசியுள்ளார்.

     

     அதில், முதல் சீசனை இயக்கும்போது அதிக ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தத்தில் தனது 8-9 பற்கள் கொட்டிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இதை அவர் வருத்தம் இல்லாமலேயே தெரிவித்திருக்கிறார். முதல் சீசனில் மன ரீதியாக நிறைய இன்னல்களை சந்தித்திருந்தாலும் இரண்டாம் சீசனை இயக்கவும் முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • அரையிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதிச் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்து வீரருடன் மோதினார்.

    இதில் கிரண் ஜார்ஜ் 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் ஏர் விமானம் கிளம்பியது
    • எக்சிட் கதவை நெருங்கி அதை திறக்கப்போவதாக கத்தி கூச்சல்போட்டு மிரட்டியுள்ளார்.

    தென் கொரிய விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது உள்ளே இருந்த பயணி எக்சிட் கதவை திறக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் ஏர் விமானமே KE658 பயணிகளுடன் கிளம்பியது.

    அப்போது பயணி ஒருவர் எக்சிட் கதவுக்கு அருகே ஊழியர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அங்கிருந்து எழுந்து அவர் புக் செய்த சீட்டுக்கு போக விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஆனால் அங்கிருந்த செல்ல மறுத்த அந்த நபர் திடீரென எக்சிட் கதவை நெருங்கி அதை திறக்கப்போவதாக கத்தி கூச்சல்போட்டு ஊழியர்களையும், சக பயணிகளையும் மிரட்டியுள்ளார்.

    அனால் தரையிறங்கும்வரை நிலைமையை சமாளித்த ஊழியர்கள், விமானம் சியோலில் பாதுகாப்பாக தரையிறங்கியவுடன் இன்சியான் சர்வதேச விமான பாதுகாப்பு படையினரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். பயணி விமானத்தில் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் கிரண் ஜார்ஜ் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் தாய்லாந்து வீரருடன் மோதுகிறார்.

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீன தைபே வீரர் சி.யு.ஜென் மோதினர்.

    முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டை 19-21 என போராடி இழந்தார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இவர் 21-17 என தன்வசப்படுத்தினார்.

    இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்தது.

    இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதுகிறார்.

    • 36 நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து சென்றதே சாதனையாக இருந்தநிலையில் அதனை முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றது.
    • சாதனையில் பங்கேற்ற அனைத்து நாய்களும் இறைச்சி கடைகளில் இருந்தும், சாலையோரங்களில் இருந்தும் மீட்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களை சமைத்து உணவாக உண்கிறார்கள். இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும், செல்லப்பிராணிகள் பராமரிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தென்கொரியாவில் நடத்தியது.

    அதில் கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்ற வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் 38 நாய்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 36 நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து சென்றதே சாதனையாக இருந்தநிலையில் அதனை முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றது.

    சாதனையில் பங்கேற்ற அனைத்து நாய்களும் இறைச்சி கடைகளில் இருந்தும், சாலையோரங்களில் இருந்தும் மீட்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ சேவையை முடித்துள்ளார்
    • ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார்

    தென் கொரியாவில் 7 இளைஞர்களால் உருவான BTS இசைக்குழு எல்லைகள் கடந்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த கே- பாப் இசைக்கு ரசிகர்கள் அதிகம்.

    ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களைக் கொண்ட இந்த இசைக்குழு உலகம் முழுவதும் சென்று தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே தென் கொரியாவில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவ சேவை செய்யவேண்டும் என்ற விதி உள்ளதால் BTS குழுவைச் சேர்ந்தவர்களும் ராணுவ  சேவைக்கு  சென்றனர். இதில் ஜின்னின் சேவைக் காலம் கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    தொடர்ந்து தற்போது ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ  சேவையை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் [வியாழக்கிழமை] வெளியே வந்துள்ளார். கேங்வான் மாகாணத்தில் உள்ள வோன்ஜுவில் உள்ள ராணுவ தளத்தில் தனது  சேவையை முடித்துக்கொண்டு அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த அவரை பார்க் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஜின்னும் அங்கு வந்து அவரை வரவேற்றார்.

     

    தொடர்ந்து பயிற்சி குறித்து பேசிய ஜே-ஹோப், ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து BTS குழு வேளைகளில் அவர் மீண்டும் ஈடுபட உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

    • தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை.
    • மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும்.

    நோபல் பரிசு  

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் [2024] இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார்.

     

    வன்முறை - துயரம்

    53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ' தி வெஜிடேரியன்' [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார். இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர்' சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன. தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை. இதுபோல 'தி ஒயிட் புக்', 'ஹ்யூமன் ஆக்ட்ஸ்', 'கிரீக் லெசன்ஸ்' ஆகியவையும் ஹான் காங் எழுதிய மற்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்.

     

     ஹான் காங் 

    1970 ஆம் ஆண்டு தென் கொரியாவின் குவாங்ஜூ-ல் (Gwangju) பிறந்த ஹான் காங் அரசியல் காரணங்களால் சியோலுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது இளமைக் காலத்தை செலவிட்ட அவர் தனது தந்தை மூலம் இலக்கியத்துக்கு அறிமுகமாகிறார்.இவரது தந்தையும் நாவலாசிரியர் என்பதால் சிறுவயதிலிருந்தே இருந்த புத்தகங்கள் சூழ்ந்த சூழலில் இலக்கியத்துக்கு நெருக்கமானவராக ஹான் காங் வளர்ந்தார். வளர்ந்த பின் சியோலில் உள்ள யோன்சேய் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

    1992 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஹான் காங் அதுமுதல் எண்ணற்ற படைப்புக்களை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும். 2014 ஆம் ஆண்டில் வெளியான ஹியூமன் ஆக்ட்ஸ் என்ற இவரது நாவல் 1980களில் தென் கொரியாவில் ராணுவத்தால் கொல்லப்பட்ட குவாங்ஜு மக்களின் வாழ்க்கையைப் பற்றியது ஆகும்.

    தொந்தரவு 

    தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள இந்த 53 வயது எழுத்தாளரைத் தென் கோரிய அரசும் மக்களும் கொண்டாடி வருகிறனர். ஆனால் எந்த கொண்டாட்டங்களில் ஈடுபட ஹான் காங் விரும்பவில்லை. நோபல் பரிசு பெற்றது குறித்து எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்க மறுத்துள்ளார். இது அவரின் தீர்க்கமான முடிவு என்று ஹான் காங் தாயார் தெரிவிக்கிறார். உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றில் நடந்துவரும் போர் தனது மகளை மிகுந்த தொந்தரவு செய்துள்ளதாக அவரது  தந்தை கூறியுள்ளார்.

    'போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொலை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும், செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?' என தன் மகள் தன்னிடம் கேட்டதாகத்  தந்தை கூறுகிறார். மேலும் உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியைப் பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை.

     

     நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையாக இருந்தால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதை நாம் எழுப்பாமல் இருக்க முடியாது ' என தனது மகள் கூறி கொண்டாட்டங்களுக்கு மறுத்துவிட்டதாகத் தந்தை  கூறுகிறார்.

    • வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என அதிகாரிகள் கூறினர்.
    • அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா செயல்படுகிறது.

    சியோல்:

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

    இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியா வடகிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தனது அணுசக்தியை முழுமையாக தயார்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாக வடகொரிய அதிபர் உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது.
    • இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புதின் 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து இருப்பதாவது:

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷிய அதிபர் புதின் வடகொரியாவுக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ஜோடி நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் 447 ஆடுகளை புதின், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

    • தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.

    சியோல்:

    தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், டென்மார்க் வீராங்கனை லைன் கிறிஸ்டோபெர்சன் உடன் மோதினார். இதில் காஷ்யப் 15-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் மால்விகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை லைன் ஜேயர்ஸ்பீல்டிடம் 21-18, 15-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சோசு வாங்கிடம் 8-21, 13-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.

    ஏற்கனவே பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெளியேறியுள்ளது.

    • தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    சியோல்:

    தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா-ஸ்வேதாபர்னா ஜோடி, சீன-தைபேவின் ஹை பெய் ஷா-ஹங் என் சு ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 18-21, 5-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்தப் போட்டி சுமார் 37 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    நாளை நடைபெற உள்ள பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், மால்விகா பன்சோத் மற்றும் அஷ்மிதா சாலிஹா விளையாட உள்ளனர்.

    ×