search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்திய பொருளாதாரம் ரூ.2,400 லட்சம் கோடியாக உயரும்: பியூஸ் கோயல் நம்பிக்கை
    X

    இந்திய பொருளாதாரம் ரூ.2,400 லட்சம் கோடியாக உயரும்: பியூஸ் கோயல் நம்பிக்கை

    • மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030-ம் ஆண்டுக்குள், இதை 2 டிரில்லியன் டாலராக (ரூ.160 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம்.

    உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக (ரூ.2,400 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர் வரை (ரூ.3 ஆயிரத்து 600 லட்சம் கோடி) உயரக்கூடும்.

    கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×