search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பல்வேறு நாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்
    X

    மத்திய மந்திரி பியூஸ் கோயல்

    பல்வேறு நாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்

    • பொருளாதார, ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த இந்தியா-அமெரிக்கா விருப்பம்.
    • இந்தியா வளர்ந்த நாடாக, நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    லாஸ் ஏஞ்செல்ஸ்:

    அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற் கொண்டுள்ள மத்திய தொழில், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவும், அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது.

    குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளோடு இணைந்து இந்தியா செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தின் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா கலந்து கொண்டது. விநியோக சங்கிலி வரி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய நான்கு துறை வெளிப்பாடுகளில் திருப்தி தெரிவித்து இந்தியா அவற்றில் இணைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×