என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சியை பிரகடனம் செய்த அதிபர் யூன்..
- பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
- தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்
தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தி உள்ளார்.
பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில் எதிர்க்கட்சிகள் வடகொரிய கம்யூனிச சக்திகளுடன் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டி அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலப்படுவதாகத் தேசிய ஊடகத்தில் தோன்றி நாட்டு மக்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென் கொரியாவில் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அதிபர் யூன் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இந்நிலையில் திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கும் தேச விரோத சக்திகளை அகற்றவும், நான் இதன் மூலம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை, குற்றச்சாட்டுகள்,விசாரணைகள் மற்றும் நீதியிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை முடக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இந்த திடீர் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அச்சத்தில் தென் கொரிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.