என் மலர்
உலகம்
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் பேச தயாராக உள்ளேன்: அதிபர் புதின் தகவல்
- வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
- அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என புதின் தெரிவித்தார்.
மாஸ்கோ:
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார். வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மற்றும் உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை டிரம்ப் முன் இருக்கும் பெரிய சவால்கள். அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு பேசினார். மேலும், ரஷிய அதிபர் புதினுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது,, உக்ரைன் போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்து பேசப்பட்டதாக செய்தி வெளியானது.
டிரம்ப் அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயார் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என அதிபர் புதின் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.