என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இங்கிலாந்தில் குதிரைக்கொம்பாகி வரும் வாடகை வீடுகள்: காரணம் இதுதானாம்...!!!
- 2019-ல் வாடகை வீடு தேடுவோர் எண்ணிக்கை சராசரியாக 6 என்ற அளவில் இருந்தது
- தற்போது 18 முதல் 20 என மூன்று மடங்கு உயர்ந்துள்ளது
இங்கிலாந்து முழுவதும் வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாகி வருகிறது.
வாடகைக்காக வீடுகளை நேரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2019-ம் அண்டு சராசரியாக 6 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து 18 முதல் 20 ஆக உள்ளது என வீடுகள் வாங்க மற்றும் விற்பதற்காக இயங்கும் இணைய தளம் ரைட்மூவ் அளிக்கும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கிலாந்தின் வடமேற்கு பகுதிகளில் 30-ஐ எட்டியுள்ளது.
வாடகைக்கு ஒரு வீட்டை தேடுவது மிகவும் மன அழுத்தத்தை உண்டாக்க கூடிய கடினமான செயலாக இருப்பதாக பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சில வருடங்களாகவே இங்கிலாந்தில் வங்கிகளில் வீட்டு கடன் வட்டி உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் வங்கி கடன் பெற்று வீடு வாங்கும் திட்டத்தை தள்ளிபோட்டு வாடகைக்கு இருப்பதையே விரும்ப தொடங்கினார்கள். அதிகரித்திருக்கும் வட்டி விகிதத்தால் சில வீட்டு உரிமையாளர்களும் லோன் மூலம் வாங்கிய தங்கள் வீடுகளை விற்க முயல்கிறார்கள்.
இந்த காரணங்களால் வாடகைக்கு வீடு தேடுவோர் அதிகமாகவும், வீடுகள் குறைவாகவும் உள்ள ஒரு முரண்பட்ட சூழ்நிலை உருவாகி வாடகை வீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளது.
பல இடங்களில் கேட்கப்படும் வாடகையை விட அதிகமாக வழங்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள். வீட்டை பார்ப்பதற்கு வரிசையில் நிற்க மக்கள் முன்னரே வந்து விடும் நிலை பல இடங்களில் நிலவுகிறது. பல குடும்பங்களில் இதனால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரியும் கிளாடியா (25), ஒரு படுக்கையறை கொண்ட ஒரு ஃப்ளாட்டில் அவளது காதலன் மைக்கேலுடன் மாதத்திற்கு ரூ. 2.3 லட்சம் (2150 pounds) வாடகைக்கு குடிபுகுந்திருக்கிறார். இந்த வாடகை வழக்கமான வாடகையை விட ரூ.30 ஆயிரம் (200 pounds) அதிகம் ஆகும்.
"எங்கள் இருவரின் மொத்த வருமானத்தில் பாதியை இதுவே விழுங்கிவிடும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை" என கிளாடியா கூறுகிறார். வழக்கமாக இந்தியாவில், நகரங்களில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த நெருக்கடி தற்போது இங்கிலாந்திலும் பரவி வருவது பேசுபொருளாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்