search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- ரஷிய வீரர்கள் 63 பேர் பலி
    X

    புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- ரஷிய வீரர்கள் 63 பேர் பலி

    • ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இரு தரப்பும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் முடிவுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது.

    இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷிய வீரர்கள் உயிரிழந்தனர். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மகிவ்கா நகரில் ரஷிய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 ராக்கெட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    அதேவேளை, மகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷிய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×