என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல்: புதின் வெளியிட்ட அறிவிப்பு
Byமாலை மலர்8 Dec 2023 9:30 PM IST (Updated: 8 Dec 2023 9:30 PM IST)
- ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
- அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் 2036-ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.
மாஸ்கோ:
ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில் ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், அவரது முடிவை ராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×