search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணியவே போராட வேண்டி உள்ளது.. ராகுல் காந்தி தடாலடி - பாஜக பதிலடி
    X

    இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணியவே போராட வேண்டி உள்ளது.. ராகுல் காந்தி தடாலடி - பாஜக பதிலடி

    • இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து ராகுல் பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
    • சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார்

    காங்கிரஸ் எம்.பியும் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அடுத்தடுத்து உரை நிகழ்த்தி வரும் ராகுல் காந்தி கூறி வரும் கருத்துக்கள் பாஜவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    விர்ஜினியா மாகாணத்தில் ஹெர்ன்டன் பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ராகுல் காந்தி தனது உரையில், இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன் [தலைப்பாகை] அணிவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதற்கும் கதா [சீக்கியர்கள் அணியும் வளையம்] அணிந்து கொண்டு குருத்துவாராவிற்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்பதற்குமான போராட்டம் நடக்கிறது. இதுவே தற்போது இந்தியாவில் நடக்கும் போராட்டம், இது சீக்கியர்கள் பற்றியானது மட்டுமல்ல, எல்லா மதங்களையும் பற்றியது என்று கூறினார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் RP சிங், 1984 இல் டெல்லியில் வைத்து 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் டர்பன்கள் அவிழ்க்கப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டது. அவர்களின் தாடியும் மழிக்கப்பட்டது. இது அனைத்தும் ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது நடந்தது. சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். ராகுலின் கருத்துக்கு அவர் மீது வழக்கு தொடர்வோம் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×