என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2023/08/11/1930576-charles.webp)
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
- நாணயம் மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள 2-வது நாணயமாகும்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6-ந்தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்தது.
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாக அதனை அதிகாரப்பூர்வமாக தயாரித்த தி ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் வங்கி கிளைகளில் இந்த சிறப்பு நாணயங்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக இந்த நாணயம் புழக்கத்தில் வந்தது. இந்த நாணயம் மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள 2-வது நாணயமாகும்.