search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மனித மூளையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    X

    மனித மூளையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    • மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்
    • சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன

    உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், மனிதர்களுடைய மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது

    நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ரீஜண்ட்ஸ் பேராசிரியரும் மருந்து அறிவியல் பேராசிரியருமான மாத்யூ காம்பன், "குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவது 50% அதிகரித்துள்ளது. சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன. இது ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனில் எடைக்கு சமம் என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விட மூளையில் 7 முதல் 30 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகவும் சராசரியாக 45 அல்லது 50 வயதுடைய சாதாரண நபர்களின் மூளை திசுக்களில் ஒரு கிராமுக்கு 4,800 மைக்ரோகிராம்கள் மைக்ரோபிளாஸ்டிக் இருந்தது என்றும் டிமென்சியா எனும் மராத்தி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இதை விட 10 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் இருந்ததாக" அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    Next Story
    ×