search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வாழைப்பழத்தை கண்டால் தெறித்து ஓடும் ஸ்வீடன்  அமைச்சர்.. பாடாய் படும் ஊழியர்கள் - ஏன் தெரியுமா?
    X

    வாழைப்பழத்தை கண்டால் தெறித்து ஓடும் ஸ்வீடன் அமைச்சர்.. பாடாய் படும் ஊழியர்கள் - ஏன் தெரியுமா?

    • நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம்
    • எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடன் நாட்டின் பாலின சமத்துவம் மற்றும் வொர்க் லைஃப் அமைச்சர் பவுலினா பிராட்பெர்க் [Paulina Brandberg]. இவருக்கு வாழைப்பழங்களைக் கண்டால் பயம் ஏற்படும் போபியா [Phobia] உள்ளது.

    உயரமான இடங்களைக் கண்டு பயப்படுவது Acrophobia, ரத்தத்தைக் கண்டு பயப்படுவது Hemophobia என பல போபியாக்கள் இருப்பது போல் வாழைப்பழங்களைக் கண்டு பயப்படுவதற்கு பெயர் bananaphobia ஆகும்.

    இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பவுலினா பிராட்பெர்க் தனது அலுவலகத்தில் தான் கலந்து கொள்ளும் மீட்டிங்களில் வாழைப்பழங்கள் தனது கண்ணில் படவே கூடாது என்று ஸ்டிரிக்டாக தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு ஸ்டிரிக்ட்டாக உத்தரவு போட்டுள்ளார்.

    அவருக்கும் அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையிலாக பரிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்கள் லீக் ஆனதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எஸ்பிரசென் [Expressen] செய்தி நிறுவனம் இந்த ஈமெயில்களை பொதுவெளியில் வெளியிட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் தேதியிட்ட ஈமெயில் ஒன்றில், ஸ்வீடன் சபாநாயகர் அலுவலகத்தில் தான் கலந்துகொள்ள உள்ள மீட்டிங்கில் வாழைப்பழகளுக்கான எந்த தடையும் இருக்கக்கூடாது, அவை எனக்கு அதிக அலர்ஜி என்று பவுலினா தெரிவித்துள்ளார்.

    பவுலினா கலந்துகொள்ள உள்ள மற்றொரு மீட்டிங் தொடர்பான ஈமயிலில், நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம், எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல ஈமெயில் உரையாடல்கள் வெளியாகி அந்நாட்டில் பேசுபொருளானது.

    இதையடுத்து பவுலினாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் [Ulf Kristersson], பவுலினாவின் போபியா அரசு நிர்வாக செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, போபியாக்களால் அவதிப்படும் மனிதர்களையும் அவர்களின் சிரமங்களையும் நான் மதிக்கிறேன், அதை கிண்டல் செய்யக் கூடாது, கடினமாக உழைக்கக்கூடிய ஒரு அமைச்சரை மக்கள் கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×