என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கென்யாவில் கடும் வறட்சியால் பலியாகும் வன விலங்குகள்
- கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது.
- கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 205 யானைகள் இறந்து விட்டன.
கென்யா:
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன.
கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 205 யானைகள் இறந்து விட்டன. பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை யானைகள் தவிர வரிக் குதிரைகள், ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள், உள்ளிட்ட 14 வகையான வன விலங்குகள் வறட்சியின் கோரபிடியில் சிக்கி பலியாகி விட்டன.
வன விலங்குகள் தொடர்ந்து இறந்து வருவது சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. கென்யாவை பொறுத்தவரை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. வறட்சி காரணமாக சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இது அந்நாட்டு அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கென்யாவில் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் இல்லை. இதனால் மேலும் பல வன உயிர் இனங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வன விலங்குகள் இறப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.