என் மலர்
உலகம்
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ஜப்பான் பள்ளிக்கூடத்தில் கடும் துர்நாற்றம்- மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Byமாலை மலர்11 March 2023 11:58 AM IST (Updated: 11 March 2023 12:58 PM IST)
- துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
- துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பள்ளி ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது பள்ளிக்கூடத்தில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசவுகரியமாக உணர்ந்தனர்.
துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பள்ளி ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோதே, மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.
அதை தொடர்ந்து இந்த துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்கள் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
X