என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கனடாவில் டிக்-டாக் செயலிக்கு தடை
- அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
- கனடா அரசால் வழங்கப்பட்டள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஓட்டாவா:
கனடா நாட்டில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கபட்டு உள்ளது. இது தொடர்பாக கருவூல வாரிய தலைவர் மோனாபோர்டியர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னனு சாதனங்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கனடா நாட்டிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று (28-ந்தேதி ) முதல் அமலுக்கு வந்துள்ளது. கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. கனடா அரசால் வழங்கப்பட்டள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தினால் அந்த செயலி அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.