search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது - ஹமாஸ்: அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்
    X

    "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது - ஹமாஸ்": அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்

    • போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
    • இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.

    இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் 8ம் நாளாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கென் இஸ்ரேல் சென்ற நிலையில், நேற்று அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் சென்றுள்ளார். அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது ஹமாஸ் அமைப்பு" என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா என்றும் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.

    Next Story
    ×