search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வடகொரியா அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனை
    X

    வடகொரியா அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனை

    • வடகொரியா- தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
    • தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு படையினர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    சியோல்:

    வடகொரியா- தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.

    தன் எதிரி நாடாக கருதும் தென்கொரியா மற்றும் அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் சமீப காலமாக வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    உலக நாடுகள் எதிர்ப்புகளை மீறி வடகொரியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று அந்த நாடு அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது.வடகொரியா ஹம்யாங் மாகாணத்தில் உள்ள கிம் சாக் நகரத்தில் இருந்து கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணைகள் சீறிபாய்ந்து சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கினை தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் தெரிய வில்லை.

    தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு படையினர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொரியா தீபகற்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    Next Story
    ×