என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கள்ளக்காதல் விவகாரத்தில் சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகர், பெண் எம்.பி. ராஜினாமா
- சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
- டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் ராஜினாமா செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர்கள் பதவி விலகி உள்ளனர். சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக பிரதமர் கூறும்போது, மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர்.
அதை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன். ஆனால் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் என்றார். டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.