என் மலர்
தாய்லாந்து
- அரசியல்வாதி தாக்கியது தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.
- பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
A politician is surrounded by journalists while walking down a corridor when one of them asks him a question.■ Instead of answering it, he raises his hand and slaps her in the head several times before climbing into his vehicle and driving away.■ Videos of this interaction in… pic.twitter.com/WjYw7CZtWa
— Stephen Mutoro (@smutoro) August 21, 2024
- சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிக்க செய்யும்.
- தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி.
சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பார்ப்பவர்களை மிகவும் ரசிக்க செய்யும். அந்த வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்துள்ளது.
இந்த போட்டிகளை பொறுத்தவரை குழந்தைகள் ஒருபுறம் இருந்து மறுபுறம் இருக்கும் வெள்ளை கோடான இலக்கை வந்தடைய வேண்டும்.
தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் குழந்தைகள் இலக்கை அடைய செய்வதற்கு பெற்றோர்கள் பெரும் பாடுபடுவார்கள்.
அதே போல போட்டியின் போது மழலை குழந்தைகளின் சேட்டைகளும் பார்வையாளர்களை பெரிதும் கவரும். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தவழும் குழந்தைகள் இலக்கை அடைவதற்காக பெற்றோர்கள் ஊக்குவிக்கும் காட்சி உள்ளது.
அதில் ஒரு குழந்தை போட்டி நடைபெறும் இடத்திலேயே படுத்து தூங்குவது போன்றும், அந்த குழந்தையை விழிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் பாடுபடுவதும் போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- புதிய பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- தாய்லாந்தின் 2-வது பெண் பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
பாங்காக்:
தாய்லாந்தில் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற பிச்சித் சைபானை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட் உத்தரவிட்டது.
ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டாலும், புதிய பிரதமரை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆளும்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. முன்னாள் நீதித்துறை மந்திரி சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா (37) ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இவர்களில் பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வு செய்து அறிவித்தது. அவருக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணிக் கட்சிகளும் ஒப்புதல் அளித்தன.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றத்தில இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தாய்லாந்தின் புதிய பிரதமராக தக்சினின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து கோர்ட் உத்தரவிட்டது.
- கோர்ட் உத்தரவை மதிக்கிறேன் என பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
பாங்காக்:
தாய்லாந்து மந்திரி சபையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் மந்திரியாக நியமிக்கப்பட்டார். பிச்சித் சைபான் கடந்த 2008-ம் ஆண்டு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர். அவரை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிச்சித் சைபான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
மந்திரிசபை உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நடத்தை விதிகளை மீறிவிட்டார் என கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோர்ட் உத்தரவை மதிக்கிறேன் என பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கோர்ட் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இந்தப் பொறுப்பில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடமாக நாட்டை நேர்மையாக வழிநடத்த நல்ல நோக்கத்துடன் முயற்சித்தேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
மந்திரியாக நியமிக்கப்பட்ட பிச்சித் சைபான் 6 மாத சிறை தண்டனை பெற்றவர் என்பது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட் அவரை நன்னடத்தை இல்லாதவர் என குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை காபந்து அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
- நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள ஒரு சீன கல்லறையில் இறந்தவர்களுக்காக திரைப்பட காட்சிகளை நடத்துவதன் மூலம் திரைப்பட அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த பயமுறுத்தும் திரைப்படம் போட்டு காட்டும் நிகழ்வை சவாங் மெட்டா தம்மசாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை, 2,800 கல்லறைகளைக் கொண்ட வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிமா மாகாணத்தில் கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
இந்த கல்லறையில் பெரும்பாலும் தாய்லாந்தில் வசிக்கச் சென்ற சீனாவைச் சேர்ந்த மக்களின் சந்ததியினருக்கு சொந்தமானது, மேலும் அவர்களின் ஆவிகளை நினைவுகூரும் வகையில் திரைப்பட காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திறந்தவெளி திரைப்பட காட்சிகளின் போது, நான்கு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர், மேலும் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை படங்கள் காட்டப்பட்டன.
அந்த பணியாளர்கள் ஆவிகளுக்கு விருந்து வைக்கும் விதமான காகிதங்களை எரித்தும், உணவு, உடை, மாதிரி வீடு, வாகனங்கள் என இறந்தவர்களில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்தையும் விருந்து வைத்தனர்.
ஆவிகளை அமைதிப்படுத்தும் முயற்சியாகவும், நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- மக்கள் பிரதிநிதித்துவ சபையில் ஏற்கனவே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இன்று செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா நிறைவேற்றப்பட்டது.
தாய்லாந்து நாட்டின் செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வெளியேறினார். 4 பேர் எதிர்த்து வாக்களித்தனர். ஏற்கனவே, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையில் கடந்த மார்ச் மாதம் இந்த மசோதா நிறைவேறியது.
இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையுயும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடியும்.
இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யவும். பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும்.
இதன் மூலம் தாயலாந்து தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடாகும்.
ஏற்கனவே தைவான் கடந்த 2019-ம் ஆண்டு தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
நேபாளம் இதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் விரிவான சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தன்பாலினத்திரின் உரிமையை பாதுகாக்க அரசு சட்ட வரைவை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- முற்காலத்தில் டிராகன்ங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை அறிவியல் பூர்வமாக இன்றளவும் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்
- உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து கொண்டிருப்பது நாம் கதைகளில் கேட்டும் சைன்ஸ் பிக்ஷன், அட்வெஞ்சர் படங்களில் பார்த்தும் வந்த டிராகனைப் போல் அச்சு அசலாக உள்ளது.
டிராகனா, பாம்பா..? நெட்டிசன்களை குழப்பிய விசித்திர உயிரினம் - வைரல் வீடியோடிராகன்கள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் காலங்காலமாக நடந்து வரும் ஒன்று. கதைகளிலும் திரைப்படங்களிலும் பிரமாண்டமானதாக சித்தரிக்கப்படும் டிராகன்கள் இன்றைய நவீன உலகில் நார்மலைஸ் ஆன ஒரு உயிரினம்.
அறிவியல் பூர்வமாக முற்காலத்தில் டிராகன்ங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை இன்றளவும் நாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் , காண்போருக்கு குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட உயிரினத்தின் வீடியோ இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில், நீர் தொட்டி ஒன்றில் உடல் முழுதும் பச்சை வண்ணமாக உள்ள உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து கொண்டிருப்பது நாம் கதைகளில் கேட்டும் சைன்ஸ் பிக்ஷன், அட்வெஞ்சர் படங்களில் பார்த்தும் வந்த டிராகனைப் போல் அச்சு அசலாக உள்ளது.
இந்த வீடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த உயிரினம் ஒரு தண்ணீர் பாம்பு ஆகும். ஆனால் மற்றைய பாம்புகளை விட வித்தியாசமான முறையில் தோற்றம் கொள்ளுவது இந்த டிராகன் விவாதத்தை நெட்டிஸன்கள் மத்தியில் மீண்டும் கிளப்பியுள்ளது
- இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது.
- இதில் இந்திய ஜோடி 21-15, 21-15 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, சீன ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சாத்விக்- சிராக் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது.
இறுதியில், சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
- மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாய்லாந்தை சேர்ந்த 59 வயது பெண்ணின் மூக்கில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து அகற்றியுள்ளனர்.
தாய்லாந்து வடக்கு பகுதிசை சேர்ந்த பெண், கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். பிறகு, பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணை தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள நகோர்ன்பிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அந்த பெண்ணுக்கு எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எக்ஸ்ரேவை பரிசோதித்த மருத்துவர் பட்டீமோன் தனச்சாய்கான், பெண்ணின் மூக்கில் அசாதாரணமான ஒன்று இருப்பதை கண்டார்.
இதையடுத்து, பெண்ணிற்கு எண்டோஸ்கோப்பிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு, பெண்ணிற்கு சிகிச்சையின் மூலம் மூக்கின் உள்ளே இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்களை மருத்துவர்கள் அகற்றினர்.
சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், கண்கள் அல்லது மூளை போன்ற அருகிலுள்ள உறுப்புகளுக்கு புழுக்கள் இடம்பெயர்ந்திருக்கக்கூடும். அது இன்னும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி, மரணத்திற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக சியாங் மாய் பகுதியில், ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அது, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர்.
- அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.
பஹ்ரைன்:
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைகன் கென்ன கம் ( வயது 31). மாடல் அழகியான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
பஹ்ரைனில் அவருக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக கைகன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இவர் சமூக வலை தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சமூகவலை தளங்களில் பதிவடுவதை நிறுத்தினார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் மாடல் அழகி கைகன் கென்னகம் பஹ்ரைனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. அவரது உடலில் எந்த காயமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அவரது கையில் டாட்டூ வரைந்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அது தங்களது மகள் தான் என கைகனின் பெற்றோர் ஒத்துக்கொண்டனர்.
மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக தூதரகத்திலும் புகார் மனு கொடுத்து உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக வெளிநாடுகளில் மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் இளம் வயதில் மரணத்தை தழுவுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
- மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
பாங்காங்:
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து சொகுசு விடுதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர்போன நாடாக விளங்குகிறது. புத்த மதத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் அளிப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
குடிமக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டினருக்கு சொர்க்கப்பூமியாக நிகழும் தாய்லாந்துக்கு புதுமண ஜோடிகள், வாலிபர்கள் அதிக அளவில் வருகை தருவர். ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
இதனையடுத்து பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் உள்பட பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர். 415 எம்.பி.க்கள் எண்ணிக்கை கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத்தில் 10 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்தநிலையில் பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்டமசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் தைவான், நேபாளத்தை அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து மாறும்.
- விவசாயிகளின் பண்ணை பொருட்கள் எரிப்பால் புகை மூட்டம் குறையாமல் இருக்கிறது
- PM 2.5 தாக்கத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என NESDC வலியுறுத்தியது
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன். இவர்களில் 1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான மக்கள், காற்று மாசு தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் (National Economic and Social Development Council) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
பண்ணை பொருட்களில் தேவையற்றவைகளை எரிக்கும் அந்நாட்டு விவசாயிகளின் பரவலான பழக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ ஆகியவற்றால் புகைமூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
2024 ஆண்டு தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் மாசுபாடு தொடர்பான நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் இதய கோளாறு போன்ற மாசுபாடு தொடர்பான நோய்களால் நாள்பட்ட கணக்கில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023ல் முதல் 9 வாரங்களில் 1.3 மில்லியன் என இருந்தது.
தற்போது (2024 தொடக்கத்தில்) இந்த எண்ணிக்கை 1.6 மில்லியன் எனும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
சுவாச மண்டலத்தை பாதிக்க கூடிய 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைந்த அளவிலான சிறிய, அபாயகரமான துகள்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழைந்து விடுகின்றன. தொடர்ந்து, இத்துகள்கள் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுத்தி இருமல் மற்றும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்த கூடியவை. இது மட்டுமின்றி இவை இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பாதிப்பை மேலும் அதிகப்படுத்தலாம்.
இத்தகைய துகள்களை "PM 2.5" என சுகாதார நிபுணர்கள் அழைக்கின்றனர்.
பொது சுகாதாரத்தில் "PM 2.5" ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்க்க தாய்லாந்து அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என NESDC கூறியது.
தாய்லாந்தில், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கரும்பு தோட்டம் மற்றும் நெல் விளைநிலங்கள் ஆகியவற்றில் வைக்கோல் போன்றவற்றை விவசாயிகள் எரிப்பது தொடர்கதையாகி வருவதால் காற்று மாசுபாடு அந்நாட்டில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.