என் மலர்tooltip icon

    உலகம்

    தாய்லாந்து பிரதமர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்
    X

    தாய்லாந்து பிரதமர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்

    • நாட்டில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
    • கூட்டணி கட்சி ஆதரவு இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வியை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    பாங்காக்:

    தாய்லாந்தில் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா (வயது 38) தலைமையிலான பியூ தாய் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இதற்கிடையே நாட்டில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

    இதற்கு பேடோங்டார்னின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவத்ரா அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்துவதே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் நத்தபோங் ருயெங்பன்யாட் குற்றம்சாட்டி வந்தார். இந்தநிலையில் பேடோங்டார்ன் மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.

    இதன்மீதான வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதேசமயம் கூட்டணி கட்சி ஆதரவு இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வியை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×