என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கண் இமைக்கும் நேரத்தில் ரூபிக்ஸ் கியூபை சால்வ் செய்து சாதனை படைத்த ரோபோ.. வைரல் வீடியோ
- ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது.
- கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரூபிக்ஸ் நிறங்களை ரோபோ ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது.
ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீது அனைவருக்கும் வசீகரமான ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கமுடியும் என்று உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளைக்காமல் முயற்சி செய்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த முயற்சியில் பல உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.10 வினாடிகளுக்குள் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.அந்த வகையில் கடந்த மே 21 ஆம் தேதி ரோபோ ஒன்று ௧ நொடிக்கும் குறைவான நேரத்தில் ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்த்து இதுவரை மனிதர்கள் படைத்த உலக சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
டோக்கியோவில் உள்ள மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கார்ப்பரேஷனின் கீழ் இயங்கும் மின்சாதன உபகரணங்களை உற்பத்தி செய்யும் பொறியியல் மையத்தில் வடிவமைக்கப்பட்ட ரோபோ, 3x3x3 ரூபிக்ஸ் கியூபாவின் நிறங்களை வெறும் 0.305 வினாடிகளில் ஒன்று சேர்த்துள்ளது.
இது மனிதக் கண்களால் பார்க்க முடிவதை விட வேகமானது ஆகும். கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரோபோ,ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது. கின்னஸ் அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
முன்னதாக 3x3x3 ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை 4.48 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த யிஹெங் வாங் ஒன்று சேர்த்ததே ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்க்கும் அதிக பட்ச வேகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.