என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
பிப்ரவரி 8 தேர்தல் நடைபெறுமா? - ஒத்தி வைக்க 3-வது முறையாக தீர்மானம்
- தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது
- கேபி (KP) பிராந்திய பயங்கரவாதமும் தீர்மானத்தில் காரணமாக கூறப்பட்டுள்ளது
2024 பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் பாராளுமன்ற 16-வது தேசிய அசெம்பிளிக்கான 342 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் உறுப்பினர்கள், தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தனர்.
நேற்று, தேர்தலை தள்ளி வைக்குமாறு 3-வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஹிலாலுர் ரெஹ்மான் எனும் சுயேச்சை உறுப்பினர் கொண்டு வந்த இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதாவது:
கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்களால் தங்கள் ஜனநாயக கடமையை இயற்ற முடியாமல் போகலாம். மேலும், கைபர்-பக்துங்க்வா (Khyber-Pakhtunkhwa) பிராந்தியத்தில் நடைபெறும் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள், அப்பகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) பிப்ரவரி 8 தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு காலகட்டத்தில் தேர்தலை நடத்துவது நல்லது.
இவ்வாறு அந்த தீர்மானம் கூறுகிறது.
2018ல் தேர்வான பாராளுமன்றத்தின் பதவிக்காலம், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.
அதை தொடர்ந்து, கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்டது.
அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டது.
இறுதியாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பிப்ரவரி 8 அன்று தேர்தல் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.
தற்போது 3-வது முறையாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் என்ன இறுதி முடிவை எடுக்க போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.