search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    முன்னாள் காதலனின் ரூ.5900 கோடி மதிப்புள்ள பிட்காயினை தவறாக குப்பையில் வீசிய பெண்
    X

    முன்னாள் காதலனின் ரூ.5900 கோடி மதிப்புள்ள பிட்காயினை தவறாக குப்பையில் வீசிய பெண்

    • ஹார்ட் டிரைவ் நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு கீழ் புதைந்துள்ளது.
    • பிட்காயின் விலை லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதையடுத்து, ஹோவல்ஸுக்கு தான் பிட்காயின் வாங்கியது குறித்து ஞாபகம் வந்தது.

    இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவரது முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ் கடந்த 2009-ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கினார். அதன் தற்போதைய மதிப்பு 569 மில்லியன் பவுண்ட்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,900 கோடி) ஆகும்.

    ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை மறந்துவிட்டார். இதற்கிடையே வீடுகளை சுத்தப்படுத்தும்போது, அந்த பிட்காயின் மற்றும் அதன் டிஜிட்டர் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை அவரது முன்னாள் காதலி ஹல்பினா தவறுதலாக குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார்.

    தற்போது பிட்காயின் விலை லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதையடுத்து, ஹோவல்ஸுக்கு தான் பிட்காயின் வாங்கியது குறித்து ஞாபகம் வந்தது. தற்போது அவர் வாங்கிய பிட்காயின் தகவல் தொகுப்பு அடங்கிய ஹார்ட் டிரைவ் நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு கீழ் புதைந்துள்ளது.

    இதுகுறித்து ஹோவல்ஸ் கூறும்போது, குப்பைக் கிடங்கில் எனது ஹார்ட் டிரைவ்வை தேட அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஹார்ட் டிரைவ் திரும்ப கிடைக்கும்பட்சத்தில் நியூபோர்ட் நகர மேம்பாட்டுக்கு 10 சதவீத தொகையை தானமாக அளிப்பேன் என்றார்.

    Next Story
    ×