search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டிரோன் தாக்குதலால் ரஷிய பகுதியை துளைத்த உக்ரைன்.. அவசர நிலை பிரகடனம்
    X

    டிரோன் தாக்குதலால் ரஷிய பகுதியை துளைத்த உக்ரைன்.. அவசர நிலை பிரகடனம்

    • வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.
    • நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய பகுதிகளில் உக்ரைன் நேற்று நாளிரவு நடத்தியுள்ள டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷியாவின் வடக்கு பகுதியான வோரோநெஷ் [voronezh] பிராந்தியத்தில் நடந்த இந்த டிரோன் தாக்குதலால் சேமிப்பு கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்நிலையில் வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சில பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உக்ரைன் டிரோன்களளில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி நடந்துவருகிறது.

    கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இதுவரை சாதகமான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்கு நாடுகளில் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. மறுபுறம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×