search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தைவானுக்கு 4,100 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி
    X

    தைவானுக்கு 4,100 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி

    • தைவான் உடன் நட்பு பாராட்டி வருவதற்கு சீனா தொடர்ந்து கண்டனம்
    • கம்ப்யூட்டர் சாப்ட்வேர், உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தைவானுக்கு வழங்குகிறது

    சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது.

    இந்த நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய பணமதிப்பில் 4127.07 கோடி ரூபாய்) ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    நவீன எஃப்-16 போர் விமானத்தின் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்டவை அதில் அடங்கும். சீனா அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் முந்தையதை வட நவீன ஆயுதங்களை உள்ளடக்கியதாகும்.

    தைவானின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், அந்த நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த ஆயுதங்களை விற்பனை செய்கிறது. சீனாவிற்கு தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.

    சீனாவின் வான் தாக்குதல், பிராந்தியத்தை பாதுகாத்தல், எஃப்-16 புரோகிராம் தொடர்பாக அமெரிக்காவுடன் இயங்கும் தன்மை அதிகரித்தல் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×