என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
பாராளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகுகிறார்
- அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சி கைக்குச் சென்றது.
- இதையடுத்து, சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்த இடைக்காலத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் கைக்கு சென்றுள்ளது. இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுக்கு அதிகாரங்களைப் பெறுவதற்கு குடியரசுக் கட்சியினருடன் ஜோ பைடன் மோதல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்க மக்கள் குடியரசுக் கட்சியை தேர்வு செய்வதற்கு தயாராகிவிட்டனர் என அக்கட்சியின் மூத்த தலைவர் கெவின் மக்கார்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சபையின் அடுத்த சபாநாயகராக ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசிக்கு பதிலாக மக்கார்தியை குடியரசுக் கட்சி தேர்வு செய்துள்ளது. இதனால் மக்கார்திக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நான்சி பெலோசி கூறுகையில், அடுத்த காங்கிரஸில் ஜனநாயகக் கட்சித் தலைமைக்கு நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படமாட்டேன். என்னைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சிக் கூட்டத்திற்கு புதிய தலைமுறை தலைமை தாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.