என் மலர்
உலகம்
X
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
ByMaalaimalar23 Jan 2025 10:01 AM IST
- 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
- புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த ஏற்பாடு.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1000 ராணுவ வீரர்களும், 500 கடற்படையினரையும் அனுப்ப தொடங்கியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே பணியில் உள்ள 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விமானங்களுக்கு உதவ ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படுகின்றன.
Next Story
×
X