என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
எச்-1பி விசாவில் புதிய நடைமுறை: இந்தியர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்
- எச்-1பி விசாவை புதுப்பிக்க வெளிநாட்டினருக்கு சிரமம் இருந்து வருகிறது
- புது நடைமுறையில் இந்தியர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள்
அமெரிக்காவில் ஹெச்-1பி (H1B) எனப்படும் விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள், அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டியுள்ளது. 2004-ல் இருந்து இது நடைமுறையில் உள்ளது.
ஹெச்-1பி விசா எனப்படுவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை (இந்தியா உட்பட), பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியாகும். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல.
எனவே ஒவ்வொரு 3 ஆண்டு-கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை "ஸ்டாம்பிங்" (stamping) செய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த "ஸ்டாம்பிங்" பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை.
இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று புதுப்பித்து அதன் பிறகே மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்தது. இந்த பயணங்களினால் பயனாளர்களுக்கு நேர விரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் குறிப்பாக மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது முறையிட்டு வந்தனர்.
அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஒரு மாற்றம் கொண்டு வரவிருப்பதாகவும், அதனை குறித்து அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
எனினும், இத்திட்டம் உடனடியாக நாடு முழுவதும் கொண்டு வரப்படாமல், "பைலட் பிராஜக்ட் முறை" எனப்படும் சிறிய அளவில் முதலில் ஒரு சில பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டதும், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்த செய்தி வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்