search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரோனா
    X

     ஜில் பைடன்

    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரோனா

    • ஜோ பைடன் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
    • இரண்டு வார இடைவெளியில் ஜில் பைடனுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்,

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடன் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உரிய சிகிச்சையை எடுத்து வருகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×