என் மலர்
உலகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
- வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21-ம் தேதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.