search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதால் பெற்றோர், உடன்பிறந்தோரை கொன்றேன் - இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்
    X

    நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதால் பெற்றோர், உடன்பிறந்தோரை கொன்றேன் - இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்

    • டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் தனது குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
    • விசாரணையில், அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள் என்பதால் பெற்றோர், உடன்பிறந்தவர்களைக் கொன்றேன் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த செவ்வாயன்று ஒரு நபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கிருந்த சீசர் உள்ளே பலர் இறந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைதுசெய்தனர்.

    சீசரின் பெற்றோரான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் உடல்கள் குளியலறையில் மீட்கப்பட்டன. வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் கழிவறைக்கு இழுத்துச் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், தனது குடும்பத்தினர் நரமாமிசம் உண்பவர்கள். அவர்கள் தன்னை சாப்பிட திட்டமிட்டதால் அவர்களை நான் கொன்றேன் என தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×