search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து அமெரிக்கா விலகல்.. பாலஸ்தீன நிவாரண நிதியையும் நிறுத்திய டிரம்ப்
    X

    ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து அமெரிக்கா விலகல்.. பாலஸ்தீன நிவாரண நிதியையும் நிறுத்திய டிரம்ப்

    • பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளார்.
    • இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ள்ளார்.

    கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

    முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். பல்வேறு வளரும், பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த யுஎன்- எய்ட் நிதியை நிறுத்தினார்.

    இந்நிலையில் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று அவர் கையெழுத்திட்டார். மேலும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

    ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த ஐ.நா. அமைப்புகளுக்குள் "அமெரிக்க எதிர்ப்பு" இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்று நேற்று டிரம்பை சந்தித்ததும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளது தற்செயலானது அல்ல.

    UNRWA ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் வழங்குகிறது என நேதன்யாகு ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அதனை UNRWA திட்டவட்டமாக மறுத்தது. இதைத்தொடர்ந்து 2024 இல் அமெரிக்கா UNRWA நிதியை தாற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில் டிரம்ப் தற்போது அந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

    13 மாதகால போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 62 ஆயிரம் பேர் உயிரிழந்த காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளுக்குள் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி மீண்டும் திரும்பி வருகின்றனர்.

    லட்சக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளும் மனிதாபினான உதவிகளும் தேவைப்படும் சூழலில் UNRWA நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×