என் மலர்
உலகம்

விமான பயணத்தின் போதே நடுவானில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண்
- பிரசவத்திற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
- ஹாசன் கான் பிரசவம் பார்த்திருக்கிறார்.
ஜார்டனில் இருந்து லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு மருத்துவர் ஹாசன் கான் பிரசவம் பார்த்திருக்கிறார்.
சுமாராக இரண்டு மணி நேர விமான பயணத்தின் போது விமானத்திற்குள் மருத்துவ அவசர நிலை உருவானது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஹாசன் கானிடம் விமான குழுவினர் உதவி கோரினர். உடனே உதவ முன்வந்த மருத்துவர், பெண் ஒருவருக்கு பனிக்குடம் உடைந்து பிரசவத்திற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
இதை பார்த்த மருத்துவர், உடனே பிரசவ பணிகளை துவங்கினார். மருத்துவரின் உதவியால் 38 வயதான பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வர்த்தக விமானம் ஒன்றில் பிறந்த 75-வது குழந்தை இது என கூறப்படுகிறது. குழந்தை பிறந்ததை அடுத்து விமானம் அருகாமையில் உள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அங்கிருந்து குழந்தையை பெற்றெடுத்து பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து பேசிய மருத்துவர், "விமானம் வேறு பாதையில் திருப்பப்பட்டதால், எனது பணிக்கு செல்ல தாமதமாகி விட்டது. தாமதத்திற்கான காரணத்தை அறிந்த எனது உயரதிகாரி என்னை பாராட்டினர்," என்று தெரிவித்தார்.






