search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மூலநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
    X

    மூலநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

    மூலநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
    • கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவாரத்தின் போது சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதன்படி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று கார்த்திகை 3-வது சோமவாரத்தை முன்னிட்டு பழமையான பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் 1,008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை யொட்டி காலை 6 மணிக்கு, பால விநாயகர், வேதாம்பிகை, முருகர், சண்டிகேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை பூஜையும், காலை 10.30 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 1,008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிரவாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×