search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாய்பாபா கோவிலில் 6-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கும் பாபாவின் பிரசாதம் வழங்கப்பட்ட காட்சி.

    சாய்பாபா கோவிலில் 6-ம் ஆண்டு தொடக்க விழா

    • சாய்பாபாவுக்கு மூல மந்திர ஹோமம் மற்றும் மிருஞ்சயாகத்தில் கருங்காலி, வெள்ளை எருக்கன், துளசி, வில்வம் ஆகிய பொருள்கள் இடப்பட்டன.
    • விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டானூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவில் 6-ம் ஆண்டு தொடக்க விழா கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு மூல மந்திர ஹோமம் மற்றும் மிருஞ்சயாகத்தில் கருங்காலி, வெள்ளை எருக்கன், துளசி, வில்வம் ஆகிய பொருள்கள் இடப்பட்டன.

    இதன் பின்னர் பாலாம்பிகை பூஜை, சுமங்கலி பூஜை, சாய்பாபா விற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் பாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதுவை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் 108 பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×