என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/12/27/1997592-covid.webp)
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
- நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தகவல்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
இதற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 9க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், புதுக்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.