என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அனைத்து தொழிற்சங்கத்தினர் நூதன போராட்டம்
- புதுவை திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை 3 மாதமாக இயங்கவில்லை.
- புதுவை அரசு நூற்பாலை மீது தனி கவனம் செலுத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை 3 மாதமாக இயங்கவில்லை.
இதனால் அங்கு பணிபுரியும் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. புதுவை அரசு நூற்பாலை மீது தனி கவனம் செலுத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
2 ஆண்டுக்கு மேல் இருப்பு உள்ள நூலை விற்று சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசிலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் நூதனமாக பஞ்சு தின்னும் போராட்டம் நடத்தினர்.
இதில் ஐ.என்.டி.யூ,சி,
பி.எம்.சி. சிவசங்கரன், எல்லப்பன், நூற்பாலை தொழிலாளர் சங்கம் சிவகடாட்சம், மாதவன், பாட்டாளி
தொ–ழிற்சங்கம் ராஜாராம், ரமேஷ், ஐ.என்.டி.யூ,சி,
தேசிங்கு, விசுவாசு,
எல்.எல்.எப். நடராஜன், சாமிக்கண்ணு, எஸ்.எல்.யூ. முருகன், முத்து, ஏ.டி.யூ. ரவிச்சந்திரன், பழனிராஜா, என்.ஆர்.டி.யூ.சி. சுதாகர், சிவசுப்பிரமணியன், பி.எம்.எஸ்.கே. இளங்கோவன், துரைலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடு–பட்டவர்கள் பஞ்சை தின்னுவது போல போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து கோஷம் எழுப்பினர்.