என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அன்னுசாமி பள்ளியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
- பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது.
- பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல் நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியருக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வழி நடத்துதலின் படி மாணவர்களுக்கு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற செய்தி அறியுறுத்தப்பட்டது.
பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். பாகூர் தீயணைப் நிலையத்தி லிருந்து வீரர்கள் நகேஷ்வரராவ், ராஜவேலு மற்றும் பாலசந்தர் கலந்துகொண்டு, பட்டாசு வெடிக்கும் போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை எவை என்று எடுத்துரைத்தனர்.
பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் அன்புசெல்வி மாணவர் களை தீபாவளி உறுதிமொழி எடுக்கச்செய்தார்.