என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
நகர பகுதியில் 15 நாட்கள் போக்குவரத்துக்கு தடை
- வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.
- மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு பொதுப்பணித்துறை பிரிவால் கழிவுநீர் வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நகர பகுதியில் நடக்கிறது.
இந்த நாட்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. சுப்பையா சாலை, லால்பகதூர் சாஸ்திரி சாலை இடையே வரும் 30-ந் தேதி வரையிலும், லால் பகதூர் சாஸ்திரி சாலை, ஐ.ஜி அலுவலகம் இடையே மே 1 முதல் 15-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
இதேபோல பிராங்கோயில் மார்ட்டின் தெரு சந்திப்பில் லொரிஸ்டோன் தெருவுக்கும், எஸ்.வி. படேல் சாலைக்கும் இடையே மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
கொம்பங்கி தெரவில் ஐ.ஜி அலுவலகம் முதல் தலைமை செயலகம் வரை மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை புதுவை போக்குவரத்து எஸ்.பி மாறன் தெரிவித்துள்ளார்.
Next Story






