என் மலர்
புதுச்சேரி

பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் ஜி.கே ராஜன் தலைமையில் நடந்த பா.ஜனதா சக்தி கேந்திர கூட்டத்தில் மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா தெற்கு ஒன்றிய கேந்திர பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம்
- திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா வானூர் ஒன்றிய சக்தி கேந்திரா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- வானூர் தொகுதியில் விவசாயிகள், தொழி லாளர்கள், மீனவர்களுக்கு உள்ள நீண்டகால பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா வானூர் ஒன்றிய சக்தி கேந்திரா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சக்தி கேந்திரா கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் ஜி.கே ராஜன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏ.டி ராஜேந்திரன், பொதுச் செயலாளர் எத்திராஜ், ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் கலந்து கொண்டார். இதில், 50 ஆண்டுகளுக்கு மேலாக தனித் தொகுதியாக இருக்கும் வானூர் சட்டமன்ற தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்ற மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வது.
வானூர் தொகுதியில் விவசாயிகள், தொழி லாளர்கள், மீனவர்களுக்கு உள்ள நீண்டகால பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வானூர் தொகுதி மக்கள் பிரச்சினைகள் பா.ஜனதா தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அழுத்தம் தந்து வானூர் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்ப்படும் என மீனாட்சி நித்திய சுந்தர் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் செந்தில், முருகன், ஏழுமலை, சவுரிராஜன், பிரகலாதன் மற்றும் பா.ஜனதா கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






