என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
3 மாதங்களுக்கு ஒருமுறை டெங்கு பரவல்-சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
- கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
- முள்ளோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவியது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் கொம்யூன் உள்ளது.
50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்கள் என இந்த கொம்யூனில் உள்ளது. அதே சமயம் புதுவை மாநிலத்தில் வளர்ந்து வரும் கொம்யூனாக பாகூர் கொம்யூன் உள்ளது.
கொரானா தொற்றுக்குப் பிறகு, கடந்த 2022-ம் ஆண்டு முதல் பாகூர் கொம்யூனில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. பாகூர் கொம்யூனில் உள்ள கிருமாம்பாக்கத்தில் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கரையாம்புத்தூர் பகுதிகளிலும், பின்னர் முள்ளோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவியது. பின்னர் அரங்கனூர் பகுதியில் பரவியது.
அவ்வாறு டெங்கு காய்ச்சல் பரவும் போது மட்டும் கொசு ஒழிப்பு, ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை அகற்றுவது, டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே கொண்டு செல்வது போன்ற பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்களின் தினசரி பணிக்கு சென்று விடுவது வழக்கம்.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று கொசு மருந்து தெளிக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தினமும் ஒவ்வொரு கிராமமாக சென்று பொது இடங்கள், கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை
இந்நிலையில் தற்போது பாகூர் கொம்யூனுக்குட்பட்ட காட்டுக்குப்பம் கன்னியக்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 100-ம் மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக 3 மாதத்திற்கு ஒருமுறை பாகூர் கொம்யூனில் ஒரு பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இது நாள் வரையில் உயிரிழக்கவில்லை என்பதால் புதுவை அரசும், சுகாதாரத் துறையும் அலட்சி யமாக இருந்து வருகிறது.
எனவே பாகூர் கொம்யூனில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டு ப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை சுகாதாரத் துறையினர் எடுக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






