search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விபத்தில் ஊனம், மரணம் அடைந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இழப்பீடு
    X

    கோப்பு படம்.

    விபத்தில் ஊனம், மரணம் அடைந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இழப்பீடு

    • விண்ணப்பங்கள் வரவேற்பு
    • நிரந்தர ஊனத்திற்கான மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை ஆணையரும், அமைப்புசாரா நிரந்தர தொழிலாளர் நலச்சங்க உறுப்பினருமான மாணிக்கதீபன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலா ளர்களை முறையாக கண்டறியும் பொருட்டு இ-ஷரம் இணைய முகப்பில் நேரடியாகவோ அல்லது பொது எண் சேவை மையம் மூலமாகவோ கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை பதிவு செய்த அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு இழப்பீடு வழங்க அறிவித்துள்ளது.

    அதன் படி விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

    விபத்து மரணத்துக்கு இழப்பீடு தொகை பெற விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் ஆதார் அடையாள அட்டை. இ-ஷரம் அடையாள அட்டை, யூ.ஏ.என். இறப்பு சான்றிதழ், இறப்புக்கான மருத்துவ சான்றிதழ், முதல் விசாரணை அறிக்கை (எப்.ஐ.ஆர்), பிரேத பரி சோதனை அறிக்கை, 18 வயதுக்குள் இருக்கும் வாரிசு தாரர், பாதுகாவலர் விண்ணப்பிக் கும்போது மாவட்ட கலெக்டர் வழங்கிய பாதுகாவலர் சான்றிதழை ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    விபத்து ஊனத்துக்கு இழப்பீடு தொகை பெற விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, இ-ஷரம் அடையாள அட்டை, யூ.ஏ.என். எண், விபத்தின் காரணமாக மருத்துவமனையில் உள்ள நோயாளியாக சிகிச்சை பெற்று கொண்ட தற்கான மருத்துவ குறிப்பு அடங்கிய ஊனத்தின் தன்மைக்கான சான்றிதழ், அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் சான்றிதழ், நிரந்தர ஊனத்திற்கான மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    மேற்கண்ட அனைத்து ஆவணங்களும் வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால், இழப்பீடு கோரும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் புதுவை அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×