என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பட்டதாரி பெண்ணிடம் வரதட்சணை கொடுமை
- கூடுதல் வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண்ணை கொடுமை செய்த கணவர்-குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முதலியார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.
புதுச்சேரி:
கூடுதல் வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண்ணை கொடுமை செய்த கணவர்-குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதலியார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மோகனபிரியா(வயது29). பி.டெக் பட்டதாரியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கும் காராமணிக்குப்பம் பூந்தோட்டம் வீதியை சேர்ந்த செந்தில்குமாருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மோகனபிரியாவுக்கு அவரது பெற்றோர் 15 பவுன் நகையும், மாப்பிள்ளை செந்தில்குமாருக்கு 3½ பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள், சீர்வரிசை பொருட்கள் வாங்க ரூ.1லட்சத்து 30 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை வழங்கினர்.
அதன்பிறகு ஆடி வரிசைக்கு 4 கிராம் நகையும் செய்தனர். அதன் பின்னர் கூடுதல் நகை கேட்டு மோகனபிரியாவை கணவர் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்து வந்தனர்.
மேலும் மோகன பிரியாவின் கல்வி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் மோகனபிரியா தனது வங்கி கணக்கில் இருந்தும், தனது தந்தை வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை கல்வி கடன் செலுத்தினார்.
ஆனாலும் வேலைக்கு ஏதுவும் செல்லாத செந்தில்குமார் தொடர்ந்து மோகனபிரியாவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து செந்தில்குமாரும், அவரது தந்தை ராஜமாணிக்கம் மற்றும் உறவினர்களும் சேர்ந்து தொடர்ந்து மோகனபிரியாவை வரதசட்ணை கொடுமை செய்து வந்ததால் அவர் இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.