என் மலர்
புதுச்சேரி

சட்டமன்றத்திற்குள் நுழைய முக கவசம் கட்டாயம்.
சட்டமன்றத்திற்குள் நுழைய முக கவசம் கட்டாயம்
- புதுவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- தொற்று அதிகரித்து வருவதால் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி 827 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் புதுவையில் 55 நபர்களுக்கும், காரைக்காலில் 23 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களும், மாகியில் 2 நபர்களும் என 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 271 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று அதிகரித்து வருவதால் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்துறை செயலரும், கலெக்டருமான வல்லவன் வெளியிட்டுள்ளார்.
புதுவை சட்டமன்றத்திற்குள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அனைத்து அமைச்சர்கள் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் ஒட்டப்பட்டுள்ளது.
நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பார்க்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவையை பொருத்தவரை மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தளங்கள், வர்த்தக பகுதி போன்ற இடங்களில் மக்கள் முக கவசம் இல்லாமல் சுற்றி வருகின்றனர். அவர்களும் தாமாக முன்வந்து முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.






