என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
    X

    செயற்குழுவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் பேசிய காட்சி.

    மின் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது.
    • இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்த அகில இந்திய, மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்த அகில இந்திய, மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விரைவில் பதவி ஏற்று கட்சியை வலுப்படுத்த பணியாற்றுவது.

    புதிய நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க முகாம்கள் நடத்துவது. என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சியால் புதுவை மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் பால் விலையை உயர்த்தியது. ஏழை மக்களின் அன்றாட நடவடிக்கையை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதோடு ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த அரசு பரிந்துரை செய்துள்ளது.

    இது ஏழை மக்களை கடும் துன்பத்திற்கு உள்ளாக்கும். எனவே, அரசு பால் விலை உயர்வை திரும்ப பெற்று, மின் கட்டணத்தை உயர்த்துவதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். இல்லையெனில் கட்சி தலைமையின் அனுமதியோடு போராட்டம் நடத்துவது.

    விலைவாசி உயர்வால் ஏற்கனவே புதுவை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் பிரிபெய்டு மின் கட்டண திட்டத்தை அமுல்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமையும். எனவே, பிரிபெய்டு மின் கட்டண திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×