search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நேரு வீதியில்  இருபுறமும் பார்க்கிங் வசதி
    X

    வணிகர் சங்க நிர்வாகிகள் இசைக்கலைவன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்த காட்சி. அருகில் நேரு வீதி வியாபாரிகள் சங்க தலைவர் நமச்சிவாயம் உள்ளார்.

    நேரு வீதியில் இருபுறமும் பார்க்கிங் வசதி

    • புதுவை நேருவீதி காலம் காலமாக வியாபாரத்திற்கு சிறந்த இடமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு வணிகம் குறைவாகவே நடைபெற்று வருகிறது.
    • இதற்கு காரணம் நேரு வீதியில் சாலையின் ஒருபக்கம் மட்டுமே வாகன நிறுத்தம் வசதி செய்யுமாறு உத்தரவிட்டதே ஆகும்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி வணிகர் சங்க தலைவர் நமச்சிவாயம், துணைத்தலைவர் இசைக்கலைவன், வர்த்தக சபை துணை தலைவர் ரவி மற்றும் மார்க்கெட் அசோசியேஷன் சங்க உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நேருவீதி காலம் காலமாக வியாபாரத்திற்கு சிறந்த இடமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு வணிகம் குறைவாகவே நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் நேரு வீதியில் சாலையின் ஒருபக்கம் மட்டுமே வாகன நிறுத்தம் வசதி செய்யுமாறு உத்தரவிட்டதே ஆகும். இதனால் நேரு வீதி அதன் தனித்துவத்தை இழந்து வருகிறது.

    வணிகர்களின் நலனை மீட்டெடுக்கவும், தொழிலாளர் களின் நலனை கருதியும் கடந்த 3 ஆண்டுகளாக நேரு வீதி வணிகர் சங்கம் வணிக திருவிழாவை நடத்தி வாடிக்கையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக நேரு வீதி பக்கம் திரும்ப வைத்துள்ளனர்.

    இந்த வீதியில் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்த தாங்கள் ரங்கசாமி உத்தரவிட்டு வணிகர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறீர்கள். ஆனால் நேரு வீதியில் ஒரு பக்கமாக வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இதனால் நேரு வீதியில் வாகனம் நிறுத்துமிடம் பாதியாக குறைந்து விடும். வியாபாரமும் பாதிக்கப்படும். எனவே நேரு வீதியில் இருபுறமும் வாகன நிறுத்தம் வசதியை தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×