search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு தீர்மானம்
    X

    கோப்பு படம்.

    நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு தீர்மானம்

    • மாநில செயலாளர் சலீம் கட்சியின் தேசிய குழு முடிவுகள், மாநில அரசியல் குறித்து விளக்கி பேசினார்.
    • புதுவையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் கூட்டம் முதலியார்பேட்டை, கட்சி தலைமை அலுவ லகத்தில் நடந்தது.

    மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் கட்சியின் தேசிய குழு முடிவுகள், மாநில அரசியல் குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் நாரா கலைநாதன், அந்தோணி, ரவி, அமுதா, பொருளாளர் சுப்பையா உட்பட மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவை அரசின் பத்திரப்பதிவுத்துறையை முழுமையாக சீரமைப்பு செய்ய வேண்டும். நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை அரசு சார்பு நிறுவனங்களை புனரமைப்பு செய்து, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி மித்ரா என்ற ஒருங்கிணைந்த ஜவுளி வளாக திட்டத்தில் புதுவையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×