என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய வழிகாட்டுதல் வெளியீடு
- சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
- கான்ட்ராக்ஸ் பணியிடத்தை நிரப்ப 90 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் 10-ம் வகுப்புக்கும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டிக்கும் ஏற்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதிகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
அதை மாற்றி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பொது 90, எம்.பி.சி, மீனவர், ஓ.பி.சி, முஸ்லீம் பிரிவினர் 82, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் 75 மதிப்பெண் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி விண்ணப்பங்கள் பெற்றதும் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதேபோல வழிமுறைகள், வெயிட்டேஜ் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு பிளஸ்-2, டிப்ளமோ ஆசிரியர் படிப்பில் 70 சதவீதம், டெட் தகுதியில் 20 சதவீதம், வேலைவாய்ப்பு சீனியாரிட்டியில் 10 சதவீதம் வெயிட்டேஜ் அளிக்கப்படும். பட்டப்படிப்பு, பிஎட் படிப்பில் 70 சதவீதம், டெட் தேர்வில் 20 சதவீதம், வேலைவாய்ப்பு சீனியாரிட்டியில் 10 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும். பள்ளிநூலகம், உடற்கல்வி விரிவுரையாளர், ஆசிரியர், பல்வேறு பாட விரிவுரையாளர் பணிக்கு அவர்களின் படிப்பில் 90 சதவீதம், வேலைவாய்ப்பில் 10 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும்.
பாலசேவிகா பணிக்கு பிளஸ் 2 படிப்பில் 50 சதவீதம், பாலசேவிகா அல்லது டிப்ளமோ சான்றிதழில் 50 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும். தொடர்ந்து இந்த மதிப்பெண்கள் 90 சதவீதமாக ஆசிரியர் தகுதிக்காக மாற்றப்படும். மீதமுள்ள 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டி கவனத்தில் கொள்ளப்படும். கான்ட்ராக்ஸ் பணியிடத்தை நிரப்ப 90 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் 10-ம் வகுப்புக்கும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டிக்கும் ஏற்கப்படும்.
ஆசிரியர் அல்லாத பணிக்கான பால்பவன் பயிற்றுநர், நுண்கலை ஆசிரியர், கலை ஆசிரியர், நிகழ்கலை ஆசிரியர், தையல் ஆசிரியர் பணிகளுக்கு 50 சதவீத மதிப்பெண், 40 சதவீத கலை தேர்வு, 10 சதவீத வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் வெயிட்டேஜ் தரப்படும்.
இந்த படிப்புகளில் மதிப்பெண் தராமல் கிரேடு தரப்பட்டிருந்தால் 50 சதவீதம் மேல் முதல் வகுப்பு, 45 சதவீதத்துக்கு மேல் 2-ம் வகுப்பு, 40 சதவீதத்துக்கு மேல் 3-ம் வகுப்பு தேர்ச்சியாக கவனத்தில் கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்